உயர் கணித சார ஜோதிட பயிற்சி

பிரிவு - 1 அடிப்படை ஜோதிட பயிற்சி (Basic Astrology Training)

தகுதி:-     ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது

பயிற்சி நேரம்:-     ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
பயிற்சி காலம் :-     பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள்
கட்டணம் :-     முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-)

குறிப்பு:

அடிப்படை ஜோதிட பயிற்சி (basic Astrology Training) பெறுபவர்கள், மூன்று நாள் சார ஜோதிட பயிற்சியை (Advanced KP Stellar Astrology) கற்க தனியாக முன்பதிவு கட்டணம் (ரூபாய் 2500 /-) செலுத்த தேவை இல்லை. நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- செலுத்தினால் போதுமானது.

சிறப்பு சலுகை :

1. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு முன்பதிவு கட்டணத்தில் 20% சலுகை வழங்கப்படும். இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.

2. பதிவு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி உண்டு. முதலில் வரும் 15 அன்பர்களுக்கு மட்டுமே சேர்க்கை என வரையரறுத்துள்ளோம்.

3. தாமதமாக வரும் அன்பர்கள் அடுத்த அடிப்படை ஜோதிட பயிற்சி வகுப்புகளில் பயில அனுமதிக்க படுவார்கள். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் புதிய பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.

அடிப்படை ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டம் (Basic astrology training syllabus):

பாடம் 1 : ஜோதிடம், வானமண்டலம், பஞ்சாங்கம் பற்றின அறிமுகம்.

பாடம் 2 : 12 ராசிகள், 9 கிரகங்கள் பற்றின விபரங்கள், காரகங்கள்

பாடம் 3 : பஞ்சாங்கத்தை பயன்படுத்தும் முறைகள், ஜோதிட சொற்களும் அவற்றின் விளக்கங்களும்.

பாடம் 4 : 27 நட்சத்திரங்களும் அவற்றின் விபரங்களும்

பாடம் 5 : காலபுருஷ தத்துவ விளக்கங்கள்

பாடம் 6, 7 : ஜாதக கணிதம், ராசிக்கட்டம், நவாம்சம், தசா புத்திகள் கணிக்க பயிற்சி.

பாடம் 8, 9 : 12 பாவங்களின் காரகங்களை அகம், புறம் என்று பிரித்து நவீன கால கட்டத்திற்கு ஏற்ப ஜோதிட ரீதியில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல்

பாடம் 10 : முகூர்த்த நிர்ணயம், திருமண பொருத்தங்கள்.

பாடம் 11 : கிரகங்களின் கார பலத்தை கருத்தில் கொண்டு 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் தசா புத்திகளுடன் இணைத்து ஜாதக பலன்களை அறியும் (சிறப்பு விதிகளை கொண்டு) பயிற்சிகள்.

பாடம் 12 : அடிப்படை KP ஜோதிட முறை (basic KP astrology) கணிதம், உபநட்சத்திரம் (sublord) என்றால் என்ன? அதற்கான விளக்கங்கள், உதாரண ஜாதகங்கள் மூலம் பாரம்பரிய கணிதத்திற்கும், கே.பி முறை கணிதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கும் பயிற்சி.

புதியதாக ஜோதிடம் (To learn basic astrology) கற்றுக்கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு பயனுள்ளதாக இந்த வீடியோ playlist இருக்கும். இந்த வீடியோ playlistல் சூரியன் முதல் கேது வரை உள்ள கிரகங்களின் காரகங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தவறாமல் இந்த வீடியோ பதிவை பார்த்து பயன்பெறவும், பயன் பெறுவதோடு மட்டுமல்லாமல் இந்த வீடியோ பதிவை லைக் செய்து, உங்களைப் போன்று ஜோதிட ஆர்வம் கொண்ட நண்பர்களுக்கு இந்த வீடியோ playlist ஐ ஷேர் செய்து, உங்களுடைய மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்.

LINK TO OUR YOUTUBE GROUP: www.youtube.com/watch?v=KqGGGHfNOQg&list=PLFvzk687DZrJvA03CI9wAzBuQpcIqfoI5s

புதியதாக ஜோதிடம் (To learn basic astrology) கற்றகற்றுக்கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு பயனுள்ளதாக இந்த வீடியோ playlist இருக்கும். இந்த வீடியோ playlistல் லக்னம் முதல் 12 பாவங்களின் காரகங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தவறாமல் இந்த வீடியோ பதிவை பார்த்து பயன்பெறவும், பயன் பெறுவதோடு மட்டுமல்லாமல் இந்த வீடியோ பதிவை லைக் செய்து, உங்களைப் போன்று ஜோதிட ஆர்வம் கொண்ட நண்பர்களுக்கு இந்த வீடியோ playlist ஐ ஷேர் செய்து, உங்களுடைய மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்.

LINK TO OUR YOUTUBE GROUP: www.youtube.com/watch?v=nuvUu7ps4qM&list=PLFvzk687DZrIVPItKaWb4T3Wj6ZK1FkJD

     Online Astrology Class!

பிரிவு - 2 உயர் கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Training Class)

தகுதி :- அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது எதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.

பயிற்சி நேரம் :- காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணிவரை

பயிற்சி காலம் :- மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்

கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட). இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது

குறிப்பு :-
ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)

சிறப்பு சலுகை :-
1. அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். மேலும் பெண்களுக்கும் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும்.

2. ஒரு குழுவாக அதாவது மூன்று நபர்கள் அல்லது அதற்கு மேல் சேர்ந்து வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும் இதற்கு முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.

3. பயிற்சிக்கு ஒரு 20 நாட்களுக்கு முன்பாக முன் பதிவு கட்டணம் ரூ.2500 /- செலுத்தி முன்பதிவு செய்த அன்பர்களுக்கு கொடுப்பினையும் தசா புத்திகளும் என்ற உயர்கணித சார ஜோதிடத்தின் அடிப்படை புத்தகம் அனுப்பி வைக்கப்படும். எமது பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு இந்த புத்தகத்தை படித்து வந்தால் வகுப்பில் நடத்தும் பாடங்களை புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும்.

வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு 300/- ரூபாய் (மூன்று வேளை உணவு, மூன்று வேளை தேநீர், தங்கும் இடம் உட்பட) செலுத்தினால் போதும். இதற்கு முன்பதிவு செய்வது அவசியம்.

ரூபாய் 2500.00 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகை:-

(1). எமது ""TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.

(2) கொடுப்பினையும் தசா புத்திகளும் என்ற உயர்கணித சார ஜோதிடத்தின் அடிப்படை புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

(3). எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை தினசரி செய்து கொள்வதற்கு "தொழில் முறை உயர் கணித சார ஜோதிடம்" என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். முன்பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்திய புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.

உயர்கணித சார ஜோதிட சூட்சுமங்களை விரிவாக விவாதித்து பல நுட்பங்களை அறிந்து கொள்ள உதவும் உயர் கணித சார ஜோதிட “அட்சய பாத்திரம்” எனும் “தொழில் முறை உயர் கணித சார ஜோதிட TELEGRAM குழு”வில் பயிற்சி வகுபிற்க்கு வருவதற்கு முன்பே சேர்ந்து விடுவதால், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் பொழுது மிக எளிதாக உயர் கணித சார ஜோதிட நுட்பங்களை எளிதில்புரிந்து கொள்ள உதவும்.

(4). ""TELEGRAM குழு"" இணைப்பு கட்டணம் ரூ2500.00 போக மீதமுள்ள ரூபாய் 1800.00 ஐ பயிற்சிக்கு வரும் போது நேரில் கொடுக்கலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம்.

பயிற்சிக்கு வரும் அன்பர்கள் எமது உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) பயிற்சி வகுப்புகளை கீழ்கண்ட you tube லிங்கில் உள்ள வீடியோக்களையும், www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று 9 கிரகங்களின் கிரக காரகங்களையும் 12 பாவங்களின் காரகங்களையும் பார்த்து விட்டு, எம்மால் எழுதப்பட்ட கொடுப்பினையும் தசா, புத்திகளும் என்ற சார ஜோதிடத்தின் அடிப்படை புத்தகத்தை படித்து பயிற்சிக்கு வந்தால் வகுப்பினை எளிதாக தங்களால் புரிந்து கொள்ள முடியும்.

Click Here to Watch Youtube Class Videos   

https://www.youtube.com/@astrodevaraj/videos

அன்பர்கள் இந்த you tube சேனலை SUBCRIBE செய்வதன் மூலம் தொடர்ந்து புதிய விடியோக்களை உடனுக்குடன் பெறலாம்.

உயர் கணித சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:

பாடம் 1 : பாரம்பரிய ஜோதிட முறையை விட உயர்கணித சார ஜோதிட முறை (Advanced KP Astrology) எந்தெந்த வகையில் மேம்பட்டது, தனித்தன்மையானது, அறிவு பூர்வமானது என விளக்குதல். கே.பி. ஜோதிட கணித முறைகளை சுருக்கமாக விளக்குதல், 12 பாவ ஆரம்ப முனைகளின் தனித்தன்மையை விளக்குதல், அதாவது 12 பாவங்களின் கொடுப்பினையை பாவ ஆரம்ப முனைகள் மூலம் எப்படி அறிவது என விளக்குதல்.

பாடம் 2 : 9 கிரகங்கள், 12 பாவங்களின் காரகங்களை இன்றைய நவீன காலத்திற்கேற்ப விரிவாக விளக்குதல். ஒரு பாவம், மற்ற 12 பாவங்களுக்கு தரும் விளைவுகளை திரிகோண அடிப்படையில் புரிந்து கொள்ள பயிற்சி அளித்தல். 12 பாவ ஆரம்ப முனைகளின் உபநட்சத்திரங்களான விதி என்ற கொடுப்பினையை, மதி என்ற தசா புத்திகளோடு எப்படி இணைத்து பகுத்து, ஜாதக பலனை நிர்ணயிப்பது என பயிற்சி அளித்தல்.

பாடம் 3 : பாவதொடர்பு என்றால் என்ன? ஒவ்வொரு பாவமும் மற்ற பாவங்களை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளை விளக்குதல். உதாரண ஜாதகம் (பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களின் ஜாதகம்) மூலம் 12 பாவங்களின் கொடுப்பினைகளுக்கான பலன்களையும், தாச புத்திகளுக்கான பலன்களையும் சிறப்பு விதிகளை கொண்டு விளக்குதல்.

பாடம் 4 : குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பாவத்தின் கொடுப்பினையை விரிவாக அலசுதல், அதாவது ஆய்வுக்கு எடுத்து கொண்ட ஒரு பாவத்தின் எல்ல வித காரகங்களையும் (அகம், புறம் சார்ந்த) பல கோணங்களில் அலசுதல். மேற்கண்ட பாவம் மற்ற 12 பாவங்களுடன் கொள்ளும் தொடர்புகளால் உண்டாகும் விளைவுகளையும், மற்ற 12 பாவங்கள் நாம் ஆய்வுக்கு எடுத்து கொண்ட பாவத்தினை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளையும் விரிவாக அலசுதல். மேலும் தசா, புத்திகள் மீது மேற்கண்ட பாவம் செலுத்தும் ஆதிக்கத்தையும் விளக்குதல்.

பாடம் 5 : பல்வேறு உதாரணங்களை (பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களின் ஜாதகங்கள்) பல்வேறு கேள்விகளுக்கு பல கோணங்களில் ஆய்வு செய்து ஜாதக பலனை நிர்ணயம் செய்வது எப்படி என விளக்குதல்.

பாடம் 6 : பல்வேறு உதாரண ஜாதகங்களை (பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களின் ஜாதகங்கள்) மாணவர்களிடம் கொடுத்து, அதில் பல்வேறு கேள்விகள் கேட்டு, அந்த கேள்விகளுக்கான பதிலை மாணவர்களிடம் பெரும் பயிற்சி.

ஒவ்வொரு ஜாதகத்திற்கும் அனைத்து மாணவர்களிடம் பெரும் பதில்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும், தவறுதலான பதிலை தெரிவிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் அதனை தெளிவுபடுத்தும் பயிற்சி.

மாலை சுமார் 3.30 மணிக்கு பிறகு அனைத்து மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட ஜாதகத்திற்கு பத்து கேள்விகளுக்கு ஒரே மாதிரியான பதிலை தருவார்கள். அதாவது மூன்று நாள் உயர் கணித சார ஜோதிட பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் பயிற்சி நிறைவு பெரும் அன்று மதியம் 3.30 மணிக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதகத்திற்கு ஒரே மாதிரியான பலனை நிர்ணயம் செய்வார்கள் என்பது எமது பயிற்சி மையத்தின் தனி சிறப்பு.

இருப்பினும் தொடர்ந்து இதே பயிற்சியை சுமார் நான்கு முதல் ஐந்து முறை (சனி மற்றும் ஞாயிற்று கிழமை வகுப்புகளில்) கலந்து கொள்வதன் மூலம் ஜாதக செய்முறை ஆய்வுகளை (Practical Horoscope Analysis) எளிதாக கற்று கொள்ளலாம். ஒவ்வொரு வகுப்பிலும் அங்கு கலந்து கொள்ளும் மாணவர்களுடைய சுமார் இருபது புதிய வேறுபட்ட ஜாதகங்கள் ஆய்வு செய்யப்படுவதால், திரும்ப திரும்ப பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சார ஜோதிடத்தில் தங்களை மெருகேற்றி கொள்ள சிறப்பான வாய்ப்பாக அமையும்.

ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், இதற்கு நாள் ஒன்றுக்கு கட்டணம் 500/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட) மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிவு 3 தொழில் முறை ஜோதிட பயிற்சி:(Professional K.P. Astrology Training Class)

தகுதி: மூன்று நாள் உயர் கணித சார ஜோதிட (KP Astrology) பயிற்சியினை எமது பயிற்சி மையத்தில் படித்திருக்க வேண்டும்.

பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

பயிற்சி காலம்: இரண்டு நாள் சிறப்பு பயிற்சி மாதந்தோறும் முதலாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில்

கட்டணம்: இரண்டு நாட்களுக்கும் ரூபாய் – 2000 (மதிய உணவு உட்பட)

வெளியூர் அன்பர்கள் பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் கூடுதலாக 300/- ரூபாய் செலுத்த வேண்டும் (மூன்று வேளை உணவு, மூன்று வேளை தேநீர், தங்கும் இடம் உட்பட)

சிறப்பு சலுகை :
எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆதித்யா பட்டம் பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1500/-
எமது பயிற்சி மையத்தில் பயின்று ஜோதிட ஆச்சார்யா பட்டம் பெற்ற அன்பர்களுக்கு இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ரூ 1000/-
இந்த சலுகையை பெற ஜோதிட ஆதித்யா அல்லது ஜோதிட ஆச்சார்யா சான்றிதழ் நகலை பயிற்சிக்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.

தொழில் முறை சார ஜோதிட பயிற்சிக்கான பாடத்திட்டங்கள்:

1, தொழில் முறையாக ஜாதகம் பார்ப்பது எப்படி.


2. நமது மென்பொருள் அச்சிடும் 16 பக்க ஜாதகம் பற்றிய முழு விளக்கம்.


3.விரிவான கிரகத் தொடர்புகள் மற்றும் விரிவானபாவத் தொடர்புகள்.


4. உயர் கணித சார ஜோதிட முறையில் திருமணப்பொருத்தம்.


5. உயர் கணித சார ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம்


6. உயர் கணித சார ஜோதிட முறையில் உயர் கல்வி நிலை அறிதல்,


7 . உயர் கணித சார ஜோதிட முறையில் பிரசன்ன ஜாதக பலனை நிர்ணயம் செய்தல்.


8. உயர் கணித சார ஜோதிட முறையில் ஜாதகத்தில் கோச்சார நிலையின் செயல்பாடுகள்.


9. முக்கிய நிகழ்வுகளுக்கு உயர் கணித சார ஜோதிட முறையில் நாள் குறிப்பது


10. உயர் கணித சார ஜோதிட முறையில் தொழில் நிர்ணயம்,


11. உயர் கணித சார ஜோதிட முறையில் தசா புத்திகளை கொண்டு சம்பவங்களின் கால நிர்ணயம்,


12. ஆளும் கிரகத்தினை பயன்படுத்தும் முறைகள்,


13. பிறந்த நேரத்தை சரி செய்தல்,


14. ஜோதிட மென்பொருளை கையாளுதல்

போன்ற தொழில் ரீதியான சந்தேகங்களை தெளிவாக்கி பயிற்சி அளிக்கும் பாட திட்டங்களை கொண்டுள்ளது.

எமது ஜோதிட பயிற்சி மையத்தில் உயர் கணித சார ஜோதிடம் பயின்ற மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் தொடர் பயிற்சி பற்றிய தகவல்::

1. எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற சுமார் 5000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை செய்து கொள்வதற்கு உயர் கணித சார ஜோதிடம் என்ற குழுவானது FACEBOOK இல் செயல்பட்டு வருகிறது. மேலும் இக்குழுவானது உயர்கணித சார ஜோதிட வகுப்புகள் , மாதாந்திர ஜோதிட கருத்தரங்கம், வருடாந்திர ஜோதிட மாநாடு பற்றின தகவல்களை அறிந்து கொள்வதற்கும் பயன்படுகிறது, புதிய மாணவர்கள் இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம். LINK TO OUR FACEBOOK GROUP: www.facebook.com/groups/stellarastrologers

2. எமது ஜோதிட பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் தங்களுக்குள் ஜோதிட ரீதியான கருத்து பரிமாற்றங்களை செய்து கொள்வதற்கு உயர் கணித சார ஜோதிடம் என்ற குழுவானது TELEGRAM இல் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி மூத்த மாணவர்கள் ஆடியோ மற்றும் PDF வடிவில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். புதிய மாணவர்கள் இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.

வெளியூர் அன்பர்கள் ஒரு குழுவாக (சுமார் பத்து நபர்கள்) சார ஜோதிடம் (Advanced KP Stellar Astrology) கற்க விரும்பினால் தங்கள் ஊருக்கே வந்து எளிய கட்டணத்தில் பயிற்சி தரப்படும்.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கடலூர், வடலூர், பெரம்பலூர், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், வேலூர், விழுப்புரம். மற்ற மாநிலங்களில் பாண்டிச்சேரி, பெங்களூர், புனே, மும்பை, டெல்லி, கல்கத்தா, ஹைதராபாத் போன்ற ஊர்களில் எம்மால் ஜோதிட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி மாநகரங்களில் நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகளுக்கு

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு::

ஜோதிஷ ஆச்சார்யா V.செந்தில், திருச்சி & தூத்துக்குடி. ஒருங்கிணைப்பாளர்---உயர்கணித சார ஜோதிட பயிற்சி வகுப்புகள், தலைமை செய்தி தொடர்பாளர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம். Cell & WhatsApp No:- 98436 27196 & 82488 78814.

கோவை மாநகரில் நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள்

முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:- ஜோதிஷ ஆச்சார்யா Dr முருகசுப்பு, துணைத் தலைவர், அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கம் கோவை.செல் 94433 34834, 88259 88722.

பாண்டிசேரி நகரில்… "நேரடியான உயர்கணித சார ஜோதிட பயிற்சி" வகுப்புகள் முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு:- பாண்டிசேரி உயர்கணித சார ஜோதிட ஒருங்கிணைப்பாளர், ஜோதிஷ ஆச்சார்யா K.R.ராஜேந்திரன் Msc , D.Astro, செல்: 70107 53922 , 99445 80682 பாண்டிசேரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக